ஆயக்குடியில் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக இ சேவை முகாம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி அத்தா மகாலில் காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் காயிதே மில்லத் இ.சேவை மையம் சார்பாக ஆதார் திருத்த முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன..
தொடர்ந்து ஏழை மக்களுக்கு உதவிடும் பொருட்டு ஆதார் அட்டையில் திருத்தம் பெயர் மாற்றம் வயது மாற்றம், பிறந்த தேதி மாற்றம், மற்றும் புகைப்பட மாற்றம் எழுத்துப் பிழை உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்து கொள்வதற்காக குறைந்த செலவில் காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் அஜ்மத் அலி தலைமையில் நடைபெற்றன.
தொடர்ந்துசையது அபுதாஹிர், மன்சூர் உசேன்,
சபீக் அகமது,சின்னவர் என்றஅஜ்மத் அலி ஆகியோர் முன்னிலையில் ஆதார் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன..
இந்நிகழ்வில் சிறப்பு வருகையாக குடிமை பொருள் தாசில்தார் சிவபாலன்,கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், ஹாஜியார்
சாந்து முகமது, இஸ்லாமிய தொண்டு இயக்க மாவட்ட செயலாளர் முகமது சலீம்,மாவட்ட ஆதார் மைய ஒருங்கிணைப்பாளர் விஜய் நிவாஸ், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றன..
மேலும் அறக்கட்டளை நிர்வாகிகளான அக்பர்அலி, ராஜமுகமது, முகமது இஸ்மாயில், அபுல் கலாம் சர்தார், சாதிக் பாட்சா,ஹைதர் அலி,பாரிஸ்அகமது,முகமது கோயா,முகமது அலி ஜின்னா, அப்துல்லா, ராஜமுகமது, டீ ஸ்டால் தாஜுதீன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு திண்டுக்கல் கரூர் மாவட்டங்களில் இருந்து ஆதார் மைய ஒருங்கிணைப்பாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு இச்சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
தொடர்ந்து 18 வது வார்டு கவுன்சிலர் அஜ்மத் அலி ஆயக்குடி பகுதியில் உள்ள 18 வார்டு பொதுமக்களுக்கும் மனிதநேய அடிப்படையில் உதவிடும் பொருட்டு கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு கோணங்களில் பொது மக்களுக்கு ஆதார் திருத்த சேவை மைய நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அனைத்துப் பகுதியில் இருந்து மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களுக்கு உள்ள திருத்தங்களை சரி செய்து கொண்டனர்.
மேலும் ஆதார் திருத்த மையத்துக்கு வருகை புரிந்த அனைத்து பொதுமக்கள் மற்றும் ஆயக்குடி சமூக ஆர்வலர்கள் கவுன்சிலர் அஜ்மத்அலிக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்…