கோவையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற உள்ளது

10,000 மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர் 

‘வீ வண்டர் வுமன்’ அமைப்பு (We Wonder Women) மற்றம் கற்பகம் அகாடமி ஆப் ஹையர் எட்யுகேஷன் (Karpagam Academy Of Higher Education) இனைந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமவுரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தும் ‘ப்ரீடம் ரன்’ – எனும் விழிப்புணர்வு ஓட்ட நிகழ்ச்சியின் 3ம் பதிப்பு வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நீலாம்பூர் பகுதியில் உள்ள டெகத்தலான் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வையும் பெண்களுக்கு தேவையான எல்லா வகையான பாதுகாப்பை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்பதை கூறிடும் நோக்கில் இந்த ‘ப்ரீடம் ரன்’ நிகழ்ச்சி நடத்தபப்பட்டு வருகிறது.

இந்த 5 கிலோமீட்டர் விழிப்புணர்வு ஓட்டம் டெகத்தலான் வளாகத்தில் துவங்கி குறிப்பிட்ட சில பகுதிகள் வழியே சென்று மீண்டும் டெகத்தலான் வளாகத்தில் முடிவடையும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஜூம்பா, ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சிகளும் டி.ஜே. இசையுடன் நடன நிகழ்ச்சியும் இடம்பெறும்.

“இந்த நிகழ்ச்சியை நடத்துவதை நடத்துவதன் மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சமுதாய பிரச்சனையை பற்றிய விழிப்புணர்வையும்  புரிதலையும் ஏற்படுத்த முடியும் என்பதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என ‘வீ வண்டர் வுமன்’ அமைப்பின் நிர்வாக அறங்காவலரான சுபிதா ஜஸ்டின் கூறினார்.

இது பற்றி மேலும் அவர் பேசுகையில், ” ‘வீ வண்டர் வுமன்’ என்பது பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அணைத்து பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதுவே எங்கள் முக்கிய நோக்கம். ‘ப்ரீடம் ரன்’  என்கிற இந்த நிகழ்ச்சியின் மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் எங்களால் பொதுமக்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் வழியாக உதவிட முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

“இந்த நல்ல நோக்கத்திற்கு ஆதரவளித்திட இதில் பங்கேற்க கார்ப்ரேட் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அழைக்கிறோம். இந்த நிகழ்ச்சி மூலமாக திரட்டப்படும் நிதியானது ஏழை பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பெண்களை தவிர ஆண்களும் 6 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களும் கலந்துகொள்ளலாம்.

முன்பதிவு செய்ய https://freedomrun.co.in என்ற இணையதளத்தை அணுகலாம். முன்பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 15, 2023.

மேலும் தகவல்களுக்கு +91 89030 27888, +91 89030 37888.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *