பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்..
1000-த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை அரவிந்த் கண் மருந்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் பாபநாசம் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கண் சிகிச்சை முகாமில் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் கண்புரை, கண்நீர் அழுத்தநோய், கிட்டபார்வை, தூரபார்வை, கருவிழியில் புண் உள்பட கண் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.