தற்போது கல்வித்துறை,கணிணி துறை,போக்குவரத்து,
காவல்துறை என பல்வேறு துறைகளில் மனஅழுத்தம் அதிகரித்து வருவதால் துறை சார்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் என மனநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இது போன்ற மனநோய் பாதிக்கப்படமால் இருக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசணைகள் வழங்கும் வகையில்,கோவை பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் வித்யாலயத்தின் சார்பில் மன மேலாண்மை நிகழ்ச்சி நடைபெற்றது.
இராஜயோகினி பிரம்மாகுமாரி ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சொற்பொழிவாளர் டாக்டர் சுவாமிநாதன்,கலந்து கொண்டு , தியானத்தின் மூலமாக மனதை ஒருங்கிணைப்பது, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்,மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது குறித்து, சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சியில், கணிணி தொழில் நுட்பம்,கல்வித்துறை ஆசிரியர்கள்,காவல் துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்…