கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் அமைந்துள்ள சிறுபனையூர் ஊராட்சியில் கடந்த 25 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மேல் தேக்க குடிநீர் தொட்டி தற்பொழுது பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது
இது சம்பந்தமாக கடந்த ஒரு வருடங்களாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கோரிக்கை மனு அளித்தும் இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஆகவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் மேல் தேக்க குடிநீர் தொட்டிய இடித்து புதிய மேல் தேக்க குடிநீர் தொட்டியை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.