தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக வேலூர் மண்டல செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில்
மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்திபன், நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், அண்ணாமலை, சக்தி, ரமேஷ், விமல், வழக்கறிஞர் தங்கபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..