ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் புலிவலம் கிளை சார்பாக ரத்ததான முகாம்
77 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழக முழுவதும் எண்ணற்ற மனிதநேய சேவைகள் செய்யப்பட்டு வருகின்றது,
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் வடக்கு மாவட்டம் புலிவலம் கிளை சார்பாக புலிவலத்தில் உள்ள ராஜலஷ்மி திருமண மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது, புலிவலம் கிளை தலைவர் எம் ஏ தமீம் அன்சாரி தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம் முகாமில் கிளை செயலாளர் எம் பஷீர் அகமது பொருளாளர் சாதிக் துணை தலைவர் பசீர் மாவட்ட தலைவர் பீர் முஹம்மது, துணை தலைவர் பாசித் மாவட்ட பொருளாளர் சலீம் மாவட்ட துணை செயலாளர் தாரிக், அனஸ், மருத்துவ சேவை அணி செயலாளர் ஹாஜா அலாவுதீன், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் அனு பார்க்கவி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்
முகாம் இறுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு 30 நபர்கள் உடற்தகுதி பெற்று குருதி கொடை அளித்தனர்