ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு
விவசாயம் இயந்திரமயமாக மாறி வருகிற நிலையில் விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் பெரும் நெருக்கடியில் வாழ்வாதரம் இழந்த நிலையில் நாடு முழுவதும் உடல் உழைப்பு தொழிலாளர்களை பாதுகாக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் நூறுநாள் வேலை பணி மட்டுமே
ஒன்றிய அரசு நூறுநாள் வேலை பணியை முடக்கும் வகையில் 2023ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நிதியை குறைத்துள்ளது. இதனால் நூறுநாள் வேலை வழங்க முடியாத நிலை உள்ளது.
2023ஆம் ஆண்டுக்கு நூறுநாள் வேலை பணியில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு தின ஊதியமாக ரூ 294 ஒன்றிய அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் ஒன்றிய அரசு அறிவித்த ஊதியத்தை வழங்காமல் மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுநிலை
சட்டத்தின் கீழ் செயல்படும் நூறுநாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் சராசரியா இவ்வாண்டு 53 நாட்கள் வேலை வழங்கியுள்ளதாக சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
259 கட்டட பணிகளை தேர்வு செய்து செயல்படுத்த வேண்டும் என அறிவித்து உள்ளதை திரும்ப பெற வேண்டும்.
நூறுநாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திடவும், தின ஊதியமக ரூ600 வழங்கிட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுருத்தியும் தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் கிராம சபாவில் தமிழ்நாடு முழுவதும் சங்க தோழர்கள் கிராம சபாவில் பங்கேற்று தீர்மானம் நிறைவேற்றவுள்ளம் அனைத்து பொது மக்களும் கிராம சபாவிற்கு செல்லுமாறு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம் என அ.பாஸ்கர் தெரிவித்தார்