தென்காசியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு 6- அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத் திற்கு முன்னாள் வட்டார செயலாளர் ராஜதுரை தலைமை தாங்கினார்மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர குமாரசாமி வரவேற்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்ட வாழ்த்துறையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், வட்டார துணைத் தலைவர் ஆரோக்கியசாமி, வட்டார தலைவர் ஷேக் முகமது ரபீக் ஆகியோர் ஆற்றினார்கள் ஆர்ப்பாட்ட விளக்க உரையை தென்காசி கல்வி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் வட்டார செயலாளர் ரவி ஆகியோர் எடுத்துரைத்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளை கைவிட வேண்டும், எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர் நிர்பந்திக்காதே, எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்களை கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் எஸ் சி ஆர் டி இயக்குனரின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும், காலை உணவு திட்டத்தை 6, 7, 8, வகுப்பு மாணவர் களுக்கும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும், காலை உணவு திட்ட பணியில் இருந்து தலைமை ஆசிரியர் களையும், ஆசிரியர் களையும் விடுவித்து திட்டம் சார்ந்த அனைத்து பணி களையும் சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத் தில் ஆசிரியர்கள் குத்தாலிங்கம், பேச்சியப்பன், ஆல்வின், பூசத்துரை, அருணாச்சலம், செந்தில், திரவியம், ஐயப்பன், ரவிக்குமார், சங்கர நாராயணன் மற்றும் ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆசிரியர் இம்மானு வேல் மாணிக்க வாசகம் நன்றி உரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *