தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு எதிராக விஷமத்தனமான செய்தியை வெளியிட்ட தினமலர் நிர்வாகம் செய்தியை உடனடியாக திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை டி.பி‌.ஐ வளாகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக விஷமத்தனமான செய்தியை வெளியிட்ட தினமலர் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தினமலர் நாளிதழ் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழியுது என்ற தலைப்பில் வன்மமான முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் பொது மக்கள் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது..

இந்தியாவே ஏன் உலகமே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கொண்டாடி வரும் நேரத்தில் இந்த வன்மமான செய்தியை வெளியிட்டு அரசு பள்ளி மாணவர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் கொச்சைப்படுத்தியுள்ள தினமலர் நாளிதழை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஏழை எளிய மாணவர்கள் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கல்வியிலும் வாழ்விலும் உயர்ந்திட திராவிட முன்னேற்ற கழக அரசு எப்போது அமைந்தாலும் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்திவருகிறது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ். சத்துணவில் தினம் ஒரு முட்டை, பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை அதன் வரிசையில் கிராம, நகர்ப்புற மாணவர்கள் காலை உணவேதும் உண்ணாமல் பள்ளிக்கு வருகின்றனர்.

காலை உணவு என்பது ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவசியம் என்பதை அறிந்த தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தாயுள்ளத்தோடு சிந்தித்து செயல்படுத்திய திட்டம்தான் பார் போற்றும் காலை உணவு திட்டம்..

ஏழை, எளிய மாணவர்களுக்கு நலன் பயக்கும் திட்டமான காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி மலம், கக்கூஸ் என்ற மூன்றாம் தர வார்தைகளைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ள செய்திக்கு தினமலர் நிர்வாகம்
உடனடியாக தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.

ஏழை எளிய மாணவர்களின் வயிற்றுப் பசி அறிந்து அவர்கள் பசிப்பிணி போக்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான கல்வி கற்கும் வாய்பை ஏற்படுத்தி அதன் மூலம் சமூக நீதியை மேலும் காத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னத திட்டத்தை போற்ற மனம் இல்லை என்றாலும் இது போல கொச்சைபடுத்தி தரம் தாழ்ந்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஏழை எளிய மாணவர்களின் ஏழ்மை மற்றும் பசியை பற்றி அறியாத இந்த நாளிதழ் அதை அறிந்து கொள்ள முயல வேண்டும் எனவும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *