மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சோ்மன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி சோதனை

மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மனுக்கு எதிரான நிலமோசடி வழக்கை சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாத புரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

எனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும், மேலும் எனக்கு பதிலாகவேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும் ரூ.20 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளார்.

இந்த மோசடியில் அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றதலைவி எம்.அமுதா, அதிமுகவைச் சேர்ந்த மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மனோகரன் உள்ளிட்டோர் தான் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2017ம் ஆண்டு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய் தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றியும், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளார்.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மானோகரன் வீட்டில் மத்திய குற்ற புலனாய்வுத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *