பாபநாசம் செய்தியாளர். ஆர். தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 1752 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீரமாங்குடி சறுக்கை வாழ்க்கை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தினை துவங்க எதிர்ப்பு தெரிவித்து சருக்கை பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதவணை திட்டத்தை அரசு செயல்படுத்தி துவங்கிய பின்பு, கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கினால் பாபநாசம் சுற்றளவை பொருத்தவரை சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் உயரும் எனவும், கதவனைத் திட்டத்தை துவங்காமல் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டால் டெல்டா மாவட்டம் வறண்ட பூமியாக மாறிவிடும் எனவும், கதவனை திட்டத்தை செயல்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் சருக்கை பகுதியில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர் இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டக்காரர்களுடன் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது வரும் நிதியாண்டில் கதவனை திட்டம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.