ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் அருகே பனை விதைகள் சேகரிப்பை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ
திருவாரூர் அடுத்த திருவிழிமிழலை ஊராட்சியில் இலட்சத் தோப்பு என்ற பகுதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இருக்கிறது. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பனை விதைகள் சேகரிக்கப்பட்டு சமூக ஆர்வலர்கள் மூலம் விதைக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து முன்னெடுக்கும்ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்கு பனை விதைகள் சேகரிக்கும் பணியை நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஒரு லட்சம் பனை விதைகளை நாகை மாவட்ட கடற்கரை பகுதிக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறுகையில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக கடற்கரை மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வரும் செப்டம்பர் 24-ல் நடைபெறுகிறது. இப்பணியை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து முன்னெடுக்கின்றனர்.
சேவையில் மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்பது வரவேற்கத்தக்கது என்றார்.
விழாவிற்கு கோ ரக்ஷனா சமிதி நிறுவனர் குருபிரசாத் தலைமை வகித்தார். கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு வரவேற்றார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ். ஹரிகிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எஸ்.முகமது ரஃபீக்,
மஞ்சக்குடி சுவாமி தயானந்தா சரஸ்வதி கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பாலாஜி, ஒய்.ஆர்.சி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஷ்ணுபுரம் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பனை விதைகளை சேகரித்தனர்.
விழாவில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன் சமூக ஆர்வலர் தாய்வீடு செந்தில், நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ரமேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தினேஷ்குமார் பொன்னிறம் உழவர் உற்பத்தியாளர் சங்க மேலாளர் நார்பட்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன் நன்றி கூறினார்