வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ சர்வ சக்தி வினாயகர்ஆலய ஜீரணோத்தாரண
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி மெயின் ரோட்டில் உள்ளஸ்ரீ சர்வ சக்தி வினாயகர் ஆலயத்தில் நேற்று (2-ந்தேதி) சனிக்கிழமை
காலை 9மணிக்கு தேவதா அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை,
மகாகணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூர்வாங்கவழிபாடு, மாலை 5-மணிக்கு மங்கள இசை,முதல் கால யாகசாலை பூஜை துவக்கம், அங்குரார்ப்பணம்,ரஷாபந்தனம், யாகசாலை பூஜைகள், திரவிய ஹோமங்கள்,மகா பூர்ணாஹுதி நடைப்பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை காலை 7-மணிக்குமங்களஇசை,
விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள்,
சுவாமி ரக்ஷாபந்தனம்ஸ்பர்ஸாஹுதி, பிம்பகூந்தி பூஜை, த்ரண்ய ஹோமங்கள்,காலை 8.50 மணிக்குமகா பூர்ணாஹுதி தீபாராதனை, காலை 9-மணிக்கு யாத்ரதனம் கடம் புறப்பாடு, காலை 9.20மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், காலை 9.45 மணிக்குஸ்ரீ சர்வ சக்தி வினாயகர்மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை, அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளைசந்திரசேகரபுரம் சர்வ சாதகம் சிவாகம ரத்னா,சிவாகம கலாநிதி கே. எஸ். வீரமணி சிவாச்சாரியார் செய்து இருந்தார்.
விழா ஏற்பாடுகளை மேலப்பூண்டி மெயின்ரோடு கிராம வாசிகள் சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.