இன்பநிதி போட்டோவுடன் இன்பநிதி பாசறை செப்டம்பர்-24 மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர். போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் பொது செயலாளர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க. செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க. திருமுருகன் ஆகியோர் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி போட்டோவுடன் இன்பநிதி பாசறை செப்டம்பர்-24 மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இது தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் பொது செயலாளர் துரைமுருகன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.