தெலுங்கானா மாநிலம், நென்னல் நகரப் பகுதியில் கிராமப்புற வங்கியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. தனியாக வீடு வாடகை எடுத்து அதில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். லாக்கர் அறைக்கு சென்ற முகமூடி கொள்ளையன் அங்குள்ள லாக்கரை திறக்க முயன்றார். அவரால் லாக்கரை திறக்க முடியவில்லை. பின்னர் லாக்கரை உடைக்க முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை. இதையடுத்து முகமூடி கொள்ளையன் வங்கி முழுவதும் நகை பணம் ஏதாவது உள்ளதா என தேடி பார்த்தார். எதுவும் கிடைக்கவில்லை.