அத்திப்பேடு ஊராட்சியில் கிராம தேவதைகளுக்கு வாடை பொங்கல் வைப்பு.
திருவள்ளூர்
அத்திப்பேடு ஊராட்சியில் உள்ள கிராம தேவதைகளுக்கு 100க் கனக்கான பெண்கள் வாடை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுகா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அத்தி ப்பேடு ஊராட்சி. இந்த ஊராட்சிக் கு உட்பட்ட பகுதிகளில்அருள் மிகு ஸ்ரீ பொன்னியம்மன், அருள் மிகு ஸ்ரீ லட்சுமியம்மன், அருள் மிகுஸ்ரீ எல்லையம்மன், கோவில் உள்ளது.
இந் நிலையில் அருள் மிகு ஸ்ரீ எல்லையம்மனுக்கு கோவிலில் நேற்று உற்சவர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து எல்லையம் மன் மண்டபம் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் வாடை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்த னர். முன்னதாக கடந்த 30 ஆம் தேதி அருள் மிகு ஸ்ரீ பொன்னியம் மன் கோவில் பெண்கள் வாடை பொங்கல் வைத்து சிறப்பு வழி பாடு நடத்தினர். பின்னர் 1-ஆம் தேதி அருள் மிகு ஸ்ரீ லட்சுமி அம் மனுக்கு வாடை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது குறிப் பிடத்தக்கதாகும். மேற்பட்ட நிகழ்ச் சிகளில் வான வேடிக்கை, மேளதா ளங்களுடன் கொண்டாடினர். இதில் ஏராளமானோர்பொது மக் கள் கலந்து கொண்டனர்.