கோயமுத்தூர் யு பி எஸ் மற்றும் சோலார்,ஸ்டெபிலைசர் சங்கத்தின் பத்தாவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகர் நாசர் கலந்து கொண்டார்..
கோயமுத்தூர் யு பி எஸ் மற்றும் சோலார்,ஸ்டெபிலைசர் சங்கத்தின் பத்தாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இதில் புதிய, தலைவராக ஜி.முத்துக்குமார் உதவி தலைவராக கே. பாலசுப்பிரமணியம் செயலாளராக எஸ் .தனசேகர பாண்டியன் பொருளாளராக ஆர் பிரபாகரன் இணைச் செயலாளராக ஜி சரவண செல்வன்ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் நாசர் கலந்துகொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர்,சங்கங்கள் எப்படி இருக்கலாம் என்பதில் நடிகர்கள் சங்கத்தை விட இந்த சங்கம் சிறப்பாக செயல்படுகிறது எங்களுடைய செயல்பாடுகள் வேறு.உங்கள் சங்கத்தின் செயல்பாடுகள் வேறு.எங்கள் சங்கத்தில் அரசியல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் அது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இருக்கும் எங்கள் சங்கத்தில் 3000 பேர் உறுப்பினராக உள்ளார்கள் உங்களது சங்கத்தில் 200 பேர் உணர்வு பூர்வமாக இருப்பதாக கூறினார்சங்கங்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் இரண்டு குழுக்களாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும் அப்பொழுதுதான் சங்கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.என பேசினார்.நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்…