பெரியகுளத்தில் ஓபிஎஸ் மனைவி நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களது மனைவி ப.விஜயலட்சுமி அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு ஸ்ரீ ரோஸி வித்யாலயா பள்ளி மற்றும் எம்ஓபி மருத்துவமனை இணைந்து எம்ஓபி மருத்துவமனையில் செப்.03 மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமினை தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடன்பிறந்த தம்பியும், பெரியகுளம் நகராட்சி அஇஅதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் குழு தலைவரும், பெரியகுளம் நகராட்சி 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான ஓ.சண்முகசுந்தரம் துவக்கிவைத்தார்.

ரோஸி வித்யாலயா பள்ளி தாளாளர் ஐஸ்வர்யா முத்துகுகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இம்முகாமில் எலும்பு முறிவு, மூட்டு வலி, மற்றும் முதுகு தண்டுவட பிரச்சினை குறித்த சிறப்பு நிபுணர் மருத்துவர் முத்து குகன், தோல் சிகிச்சை, முகப்பரு, கரப்பான், முடி உதிர்தல், சொரியாசிஸ் சிறப்பு நிபுணர் மருத்துவர் மாதவ ப்ரவீன் மற்றும் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறப்பு நிபுணர் மருத்துவர் பிரித்திவி ராஜ்குமார் ஆகியோர் முகாமில் பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு தக்க ஆலோசனைகள் வழங்கினர்.

500 க்கும் மேற்பட்ட பயனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.தோல் சிகிச்சை, எலும்பு முறிவு, மற்றும் முதுகு தண்டுவடம், பொது மருத்துவ சிறப்பு முகாமில் மக்களை நாடி மருத்துவ சேவை புரிந்து வரும் பெரியகுளம் எம்.ஓ.பி மருத்துவமனை மருத்துவர்களை பொதுமக்கள் மற்றும் மருத்துவ பயனாளிகள் பலரும் வெகுவாக பாராட்டினர்.

முகாமில் இலவசமாக எக்ஸ்ரே, இசிஜி ,மற்றும் சர்க்கரை ரத்த பரிசோதனை பார்க்கப்பட்டு பழனியம்மாள் பார்மஸியின் இலவச மருந்துகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *