வெ.பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம்.
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் , ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் சங்கீதஅரசி ரவிதுரை தலைமை தாங்கினார்.
,ஒன்றியக்குழு துணை சேர்மன் ஜீவிதா ரவி, பி.டி.ஓ., க்கள் சுமதி , முபாரக் அலி பேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலாளர் ஜெயபாலன் வரவேற்றார் .கணக்கர் தணிகைவேல் தீர்மானங்களை படித்தார்கூட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் , ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அத்தியாவசிய வளர்ச்சி திட்ட பணிகளான குடிநீர், சாலை வசதிகள் செய்திட ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
கூட்டத்தில் ஓன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன்,ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், அருணாசலம் , சத்யா, பாரதி, ராஜேஸ்வரி ,முனுசாமி, சாவித்திரி, ரவிச்சந்திரன், ஏகாம்பரம், செல்வம், நளினி, ராஜாம்பாள், அன்பரசி, செந்தில்குமார் ,மகேஸ்வரி, இளவரசி ,சாந்தி, செண்பகசெல்வி , கஸ்துாரி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.இளநிலை உதவியாளர் காமராஜ் நன்றி கூறினார்.