தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி கிராமக்கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி சுபாஷ் சந்திரபோஸ், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், நல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 290 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் குகன் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை. வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன். ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ். பொதுக்குழு உறுப்பினர் சமுத்திரபாண்டியன். ஒன்றிய விவசாய அணி பாலகுமார், ஒன்றிய தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா, மாணவரணி அமைப்பாளர் லெட்சுமண ராஜா, முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், நெட்டூர் கிளை செயலாளர் கணேசன், முத்தையா. பண்டாரம். பாக்கியம். ரெட்டியார்பட்டி குருசாமி, மருதுபுரம் ராமகிருஷ்ணன், காவலாகுறிச்சி கிளை செயலாளர் முருகையா. ரவி, தட்டப்பாறை சுப்பிரமணியன். கடங்கனேரி ராஜ். கிராம கமிட்டி பள்ளி உறுப்பினர்கள் அழகன், சிவக்குமார். ஆசிரியர்கள் சமுத்திரபாண்டி. இளங்கோ. சரவணன். இளநிலை உதவியாளர் இசக்கி துரை மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.