கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அரசு இஞ்சினியரிங் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசு இஞ்சினியரிங் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்தும் மூன்று நாள் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி கல்லூரி வளாகத்தில் இனிதே தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலமுருகன் தலைமை வகித்து பேசுகையில் அறிவியல் தொழில்நுட்பத்தில் இன்றைய உலகின் முன்னேற்றம் மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவதின் பங்கினை எடுத்துரைத்தார். இந்த பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் துணை முதல்வருமான முனைவர் கலைமணி சண்முகம் பங்கேற்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று இத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமின் நோக்கம் மற்றும் பயன்களை எடுத்துரைத்தார். கல்விப் புலத்தலைவர் முனைவர் ருக்மாங்கதன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார். இந்த பயிற்சி முகாமின் துவக்க விழாவற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மனிதவள மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர் பேராசிரியர் திருகோஸ்த்தியூர் மணிகண்டன் கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், யுக்திகள், புதுமையான அனுகுமுறைகளில் தொழில் முனைவு மற்றும் தொழில்நுட்ப திறன் தேவைப்படும் வேலை வாய்ப்பை பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துறைத்தார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 150 இறுதி ஆண்டு மாணவ மாணவியர்கள் இம்முகாமின் மூலம் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர்.

இந்த மூன்று நாள் பயிற்சி முகாமில் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி முகாமின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் தியாகராஜன் மற்றும் முகமது ஹாரிஸ் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *