நாமக்கல்
கடந்த பத்தாம் தேதி நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற கே அருள் தலைமையிலான அணியினர் 5 நிர்வாகிகள் உட்பட 50 செயற்குழு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்ற சான்றிதழ் பெற்றுக் கொண்டனர்
கடந்த 10.09.2023 அன்று நடைபெற்ற நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் 2023 – 2026ம் வரையிலான 3 ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் கே.அருள் தலைமையிலான அணியினாரான செயலாளர் கே.ஆனந்தன், பொருளாளர் பி.சீரங்கன், உதவி தலைவர் எஸ்.பாலச்சந்திரன், உதவி செயலளார் எஸ்.சந்திரசேகரன் ஆகியோருக்கு தேர்தல் பணி குழுத் தலைவரும் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான எஸ்.எல்.எஸ்.சுந்தரராஜன். நாமக்கல் தாலுக்கா உரிமையாளர் சங்க நடப்பு தலைவர் வாங்கிலி மற்றும் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னுசாமி ஆகியோர் சால்வை அணிவித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்கள் .
இதைத்தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் 50 பேர்களுக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்திற்கு வெளியே குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
இதைத்தொடர்ந்து நாமக்கல் பரமத்தி சாலையில் இருக்கும் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சமயநலத்தின் தலைவரும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவராக இருந்த வருமான டிரான்ஸ்போர்ட்ரத்ணா ப. செங்கோடன் திருவுருவ சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்தனர்