தருமபுரி புத்தகத் திருவிழாவில் மகிழினி பதிப்பகத்தின் 6புதிய நூல்களை இந்து தமிழ்திசையின் முதுநிலை ஆசிரியர் மு.முருகேஷ் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
நிகழ்வில் பதிப்பக ஆசிரியர் சு.பி முருகன் வரவேற்றார். ஆசிரியர் மா.கோவிந்தசாமி நூல்களை அறிமுகப்படுத்தினார்
புதிய நூல்கள்
இளந்தென்றல்ச சரவணன் எழுதிய சிறகை விரிசிகரம் நோக்கி நூல் அனுராதா எழுதிய மனம் திருத்திப்பறவை சூரிய மதி எழுதிய மனதோடு பேசும் தோழி மற்றும் கடவுள் எழுதிய கவிதை பாக்கியராஜ் எழுதிய நிலவொளியில் அசையும் சிலந்திவலை சு.பி முருகன் எழுதிய இசையை மொழிபெயர்க்கும் புல்லாங்குழல் நூல்கள் வெளியிடப்பட்டன.
நூலாசிரியர்கள் .மற்றும் கவிஞர் பூவிதழ் உமேஷ் எழுத்தாளர் கெளரி லிங்கம் எழுத்தாளர் ஆதிமுதல்வன் கவிஞர் ராஜசேகர் ஆசிரியர்கள் ஆஷா ,பெரியசாமி நதியா , ஹேமலதா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். ஆசிரியர் மா.பழனி நன்றி தெரிவித்தார்.