பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் பேரூராட்சியில் நவீன இறைச்சி மீன் அங்காடி கட்டிடத்தினை கட்டி தர வேண்டும் அமைச்சர் நேருவிடம் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை ..
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் , பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர்
எம். எச் .ஜவாஹிருல்லா நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார்.
அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது…
பாபநாசம் பேரூராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள இறைச்சி மற்றும் மீன் அங்காடியை இடித்து விட்டு புதிய நவீன இறைச்சி மற்றும் மீன் அங்காடி கட்டித்தர வேண்டும், அய்யம்பேட்டை மற்றும் சுவாமிமலை பேரூராட்சிகளில் பொதுமக்கள் நலன் கருதி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான
ப. அப்துல் சமது உடனிருந்தார்.