கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில்நுட்ப கல்லூரியில் 2023 ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில்,தாளாளர் சாந்தி தங்கவேலு,அறங்காவலர் அக்ஷய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரியின் முதல்வர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடையே பேசினார்.
அப்போது பேசிய அவர்,பள்ளி பருவத்திலிருந்து கல்லூரிக்கு வந்திருக்கும் மாணவ,மாணவிகள் இனி அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறிய அவர்,சவால்கள் நிறைந்த இந்த தலைமுறையில் கல்வி ஒன்றால் மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்ல முடியுன எனதெரிவித்தார்.
கல்லூரி காலங்களில் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம் என கூறிய அவர்,இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும்,உலகிலேயே அதிக மனித சக்தி கொண்டாக நாடாக நமது நாடு உள்ள நிலையில்,அதிக உழைப்பு தேவைப்படுவதாக கூறிய அவர்,இந்த சந்தர்ப்பத்தை இளம் தலைமுறை மாணவ,மாணவிகள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.முன்னதாக பேசிய கல்லூரியின் தலைவர் டாக்டர் தங்கவேலு,ஒரு குடும்பத்தின் பின்புலம் எந்த நிலையில் இருந்தாலும்,அந்த குடும்பத்தில் ஒருவர் கல்வியில் முன்னேறினால் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.கடின உழைப்பு,விடா முயற்சி ஆகியவற்றை மாணவ,மாணவிகள் கட்டாயம் பின்பற்றினால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டார்.
விழாவில் மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள்,கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.