பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் …..

மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு ..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தஞ்சை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர்
ச. தமிழன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி தலைவர் எழுச்சித்தமிழர் வருகையையொட்டி மிகச் சிறப்பாக வாகனங்களை எடுத்து வரவேற்க வேண்டும் என்றும், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மிகச் சிறப்பாக கொண்ட வேண்டும் எனவும்,
மறைந்த முது பெரும் தலைவர் மாவீரன் மலைச்சாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இக்கூட்டத்தில் தஞ்சை, புதுக்கோட்டை மண்டலச் செயலாளர் சதா. சிவக்குமார் , நில உரிமை மீட்பு மாநிலத் துணைச் செயலாளர் வீரன் வெற்றி வேந்தன், மாநிலத் துணைச் செயலாளர் சிவ தமிழ் நீதி , மாவட்ட பொருளாளர் உறவழகன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் குணசேகரன் மற்றும் ஒன்றிய நகர , மாவட்ட ,மாநில நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.