இரா.மோகன்,தரங்கம்பாடி, செய்தியாளர்.
தரங்கம்பாடி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பதற்றம் நிறைந்த பகுதிகளான சங்கரன் பந்தல், ஆயப்பாடி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பதற்றமான பகுதிகளான சங்கரன்பந்தல் முதல் இலுப்பூர் வரை மற்றும் திருக்களாச்சேரி முதல் ஆயப்பாடி வரை காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் முன்னிலையில் பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மேற்பார்வையில் 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும், எவ்வித அசம்பாதமும் இன்றி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடைபெறவும் பொதுமக்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்குவதற்கு அனைத்து முன் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்பதை அறிவிக்கும் வகையில் இப்பகுதியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.