பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விளந்தையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் குறிஞ்சி நில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் வே தங்கராசு தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் ஆர் அன்பழகன் மாநில செயலாளர் வெங்கடேசன் மாநில பொருளாளர் சி நீலமேகம் மாவட்ட அமைப்பு செயலாளர் விளந்தை (அக்ரகாரம்) கே முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் எத்தனையோ மாவட்டங்களில் மலைக்குறவர் மக்களுக்கு ST சாதி சான்று, வீட்டுமனை பட்டா, சாலை வசதி, கரண்ட் வசதி, மானியத்துடன் கூடிய கடன் உதவி இவைகள் அனைத்தும் தர மறுக்கின்றனர் குறிப்பாக தஞ்சை, திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களில் மக்கள் மனு கொடுக்கும் பொழுது விசாரணை கூட வருவதில்லை சாதி சான்று இல்லாமல் எங்கள் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் இவை அனைத்தும் இந்த தமிழக அரசு செய்து தர முன்வர வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக அரசுக்கு கோர்க்கையாக முன் வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப் பாளர் எஸ் சிகாமணி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ் மாநில அவை தலைவர் ராமசாமி, மாநில இளைஞரணி தலைவர் திருநாவுக்கரசு மாநில இளைஞர் அணி அவை தலைவர் முத்து மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா மகளிர் அணி தலைவி வசந்தா கடலூர் மாவட்ட தலைவர் மாரியப்பன் அரியலூர் மாவட்ட அவைத் தலைவர் கோவில் வாழ்க்கை முருகவேல் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டநிறைவாக அரியலூர் மாவட்ட செயலாளர் படையப்பா நன்றியுரை வழங்கினார்.