கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து அகரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணி சார்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி, குமரேசன் மற்றும் இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் நகரசம்பட்டி போலீசார் சிவசந்தர் தலைமையில் அகரம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டனர் வாகனங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.