திருக்குறள் கூறி பரிசு பெற்ற மாணவர்கள்
பள்ளி தேடி வந்த பரிசு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் கூறிய மாணவர்களை பாராட்டி ரூபாய் 3500 மதிப்பிலான கடலை எண்ணெயினை பரிசாக இதயம் நிறுவனம் பள்ளி தேடி வந்து வழங்கி பாராட்டியது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சமீபத்தில்
இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் முத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது சிறப்பான முறையில் திருக்குறள் கூறிய மாணவர்களை பாராட்டி இதயம் நிறுவனம் நிறுவனர் முத்து பள்ளிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியதுடன், ரூபாய் 3500 மதிப்பிலான கடலை எண்ணெயை பள்ளிக்கு பரிசாக அனுப்பினார். இதயம் நிறுவனத்தின் பணியாளர் ஆனந்த் பள்ளிக்கே வந்து கடலை எண்ணெய் அடங்கிய பெட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்திடம் வழங்கினார்.