லிஸ்யு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது.
மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்கள் வாழ்க்கை வளம் பெறச் செய்யும் ஆசிரியர்களை ஆதரித்து ஊக்குவிப்பது முக்கியமானது.
பள்ளி முதல்வர் அருட்தந்தை முனைவர் வழக்கறிஞர் ஜாய் அரக்கல் அவர்கள் ஆசிரியர்களின் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்களை எப்போதும் பாராட்டுவதோடு சிறந்ததொரு அங்கீகாரமும் அளித்து வருகின்றார்.
பொள்ளாச்சி ஸ்ரீ ராமு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சர்வதேச லயன்ஸ் இயக்கங்களுடன், இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியது.
இந்நிகழ்வில் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் கேரள முன்னாள் ஆளுநர் ஸ்ரீ. ப. சதாசிவம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரிடமிருந்து சு. தங்கம் ஆனந்த குமார், லிஸ்யு மெட்ரிக் பள்ளி நூலகர் சிறந்த ஆசிரியருக்கான விருதினை பெற்றார்.
லயன்ஸ் கிளப், கோயம்புத்தூர் சென்ட்ரல் மதுமிதா மற்றும் அகிலா ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தது.
திவ்யோதயா சர்வமத மற்றும் கலாச்சார மைய இயக்குனர் அருட்தந்தை ஃப்ரான்ஸிஸ் சேவியர் அவர்கள் விருது பெற்றவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவத்துக் கொண்டார்.
விருது பெற்ற ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்