பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 33 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு …..
பலத்த போலீசார் பாதுகாப்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டு 33 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது .
இந்நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பில் விஸ்வரூப விநாயகர் கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் காவல்துறையால் அனுமதி வழங்கப்பட்ட நாட்கள் வரை அதே பகுதியில் வைக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பாபநாசம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாபநாசம், திருப்பாலைத்துறை ,
வங்காரம்பேட்டை ,108 சிவாலயம், ராஜகிரி, பண்டாரவாடை, கோவில் தேவராயன் பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட 33 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மேள, தாளங்கள் முழங்க வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் பாபநாசம் நகரில் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வரப்பட்டு காவிரி ஆற்றில் போலீசார், தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக பாபநாசம் டி.எஸ்.பி பூரணி தலைமையில் கும்பகோணம் டி.எஸ்.பி கீர்த்திவாசன், முன்னிலையில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.