திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகம்புத்தூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் மக்கள் நேர்காணல் நடைபெற்றது
இதில் நன்னிலம் தாலுகாவில் உள்ள 48 ஊராட்சிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார். மேலும் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை விலையில்லா வீட்டு மனை பட்டா பட்டா மாறுதல் உத்தரவு விலையில்லா தையல் இயந்திரம் சலவைப்பட்டி ஆகியவை வழங்கினர்
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் ஊராட்சியை தூய்மைப்படுத்துவது தூய்மை காவலர்கள் பணி மட்டும் கிடையாது ஊராட்சியில் உள்ள ஒவ்வொருவரும் கடமையாகும். கொல்லாபுரம் பகுதியில் வரும் வழியில் குளத்தில் ஓரத்தில் குப்பைகளை கொட்டியுள்ளார்கள், சில இடத்தில் குப்பைகளை எரித்து உள்ளார்கள் இதனால் மாசுகள் பாதிப்புகள் ஏற்படுத்தும், குப்பைகளை போட்டு எரிக்க வேண்டாம் எனவும்,
கொல்லாபுரம் மற்றும் குருங்குளம் மக்களுக்கு கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீர்நிலைகள் சுத்தப்படுத்த வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமை அனைவரும் ஒன்றிணைந்து நீர் நிலையை சுத்தம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) லதா. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலசந்தர், கொட்டூர் ஊராட்சி மன்றத்தலைவர் ராணி கேசவன், துணைத் தலைவர் குட் லக் ராஜேஷ் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.