தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மது மற்றும் போதைப் பொருள்களுக்கு ஏதிரான மாபெரும் மாணவியரின் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி, நடைப்பெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா தலைமை தாங்கினார் மாணவர் பேரவை தலைவி பொன்சி வரவேற்புரை வழங்கினார்..
ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் சின்னத்துரை மது மற்றும் போதையால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் பற்றி எடுத்துரைத்தார்
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும் போதை பழக்கங்கள் பற்றி விரிவாக பேசினார் ஆலங்குளம் ஒன்றிய குழுத்தலைவர்
எம். திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப்பாளரக கலந்துகொண்டு பொது நிர்வாகமும் போதைச் சீர்கேடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பேரணியை
கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப் பேரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு தாலுகா அலுவலகம் வரை கல்லூரி மாணவிகள்
மதுவை ஒழிப்போம்
போதையின் வீழ்ச்சி
சமுதாயத்தின் எழுச்சி,
மண்ணை வளமாக்கு,
மதுவை பிணமாக்கு,
போதை பொருட்களை ஒழிப்போம்,
மனித வளத்தை காப்போம்,
என முழக்கமிட்டும் பதாகை ஏந்தியவாறு சாலையில்
பேரணியாக கல்லூரி மாணவிகள் சென்றனர் முகாமில் கல்லூரி மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் முடிவில் மாணவர் பேரவை செயலாளர் முத்துமாரி நன்றியுரை வழங்கினார்
விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணியில் தொழிலதிபர் மணிகண்டன்,கல்லூரிவிரிவுரையாளர்கள்முனைவர் லெனின் செல்வநாயகம்,முனைவர் பிரபாகரன், முனைவர் , முத்துராமலிங்கம், முனைவர் நல்லகண்ணு,ஆங்கிலம் துறை, முனைவர் லதா, முனைவர் வளர்மதி, கல்லூரி ஊழியர்கள், வைஷ்ணவி, ஆஷா லிங்கேஸ்வரி, பவிதா, சுகாதர ஆய்வாளர் சிவக்குமார், கலைவாணன்,தனி பிரிவு தலைமை காவலர் சொரிமுத்து, தலைமை காவலர் ஆறுமுகம், காவல் நிலைய எழுத்தர் முருகன். காவலர்கள் கிருஷ்ணராஜ், கண்ணன், கதிர்வேல், மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.