ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு திருவாரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி பாராளுமன்றத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சட்டம் இயற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட பாஜக மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சார்பில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குளிக்கரை கிராமம் கடைத்தெருவில் ஒன்றிய மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா மேரி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் மணிமேகலை மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் அமுதா நாகேந்திரன் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் லோகநாயகி , மாவட்ட மகளிர் அணி பொருளாளர் காயத்ரி, மாநில விவசாய அணி செயலாளர் கோ வீ சந்துரு ஒன்றிய மேலிட பார்வையாளரும் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கழுகு எஸ் சங்கர், ஒன்றிய தலைவர் களத்தூர் ரெங்கா, அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன் பட்டியல அணி மாவட்ட தலைவர் மாதவன் ஒன்றிய பொருளாளர் ரமேஷ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட செயலாளர் செல்லப்பன் கல்வியாளர் பிரிவு ஒன்றிய தலைவர் மணிவண்ணன் குளிக்கரை பகுதி மகளிர் அணியினர் கிளை தலைவர் ஆர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மற்றும் பகுதிகளில் கடைவீதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இல்லங்களுக்கு சென்று பாரத பிரதமர் மோடி ஜி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்கள் நிகழ்ச்சிக்கு வந்த கிளை தலைவர் ஆர் செல்வராஜ் நன்றி கூறினார்