எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு,
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் ரூ.47 இலட்சம்; மதிப்பீட்டில் சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர். பதினெட்டாம் நூற்றாண்டில் தில்லையாடியில் அருணாசலக் கவிராயர் மற்றும் தில்லைவிடங்கள் கிராமத்தில் பிறந்த மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக 2000ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் 2010ம் ஆண்டு ரூ.1.51,00,000 மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 0.44 ஏக்கர் பரப்பளவு இடத்தில், 358.80 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தனிப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் மைய மண்டபத்தில் ஏழு கலசங்களுடன், எந்த திசையிலிருந்தும் தமிழிசை மூவரைக் காணும் வகையில் இம்மணிமண்டபம் வடிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, தமிழிசை மூவர் மணிமண்டபத்;தில் சிறப்பு பழுது பார்ப்பதற்கும், புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட மதிப்பீடு பெறப்பட்டு ரூ.47,02,500க்கு நிதியளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டு, 01.04.2023 அன்று முதல் சிறப்பு பழுதுபார்க்கும் பணி; நடைபெற்று கொண்டு இருக்கிறது.
தற்பொழுது, பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆகையால், மாவட்ட ஆட்சியர் அவர்கள் சிறப்பு பழுதுபார்க்கும் பணிகளை நேரில் சென்று ஒவ்வொரு பணியையும் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார். இதில் சீர்காழி நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் நகர செயலாளர் சுப்பராயன் நகரத் துணைச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்