வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் வட்டாரம் காங்கேய நகரம் ஊராட்சியில் தூய்மையே சேவை எஸ் எச் எஸ் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் வட்டாரம் காங்கேயநகரம் ஊராட்சியில்தூய்மையே சேவை( எஸ் ஹெச் எஸ்) நிகழ்ச்சிநடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளி வளாகம்,அரசுகட்டிடங்கள் அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், பொதுமக்கள் தங்களின் வீடுகள், தெருக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ளவும், நீர்நிலைகள் தேங்காமல் பார்த்து கொள்ளவும், பொதுமக்கள் தூய்மை காவலரிடம் குப்பைகளை தனித்தனியே பிரித்துக் கொடுத்திடவும், இந்த நிகழ்ச்சியானது செப்டம்பர் 15 முதல் அக்டோபர் வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார்,மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மக்கள் நலப் பணியாளர் வட்டார ஒருங்கிணைப்பாளர் வீராசாமி மற்றும் ஊராட்சியின் செயலாளர் ஸ்டீபன், ஊக்குவிப்பாளர் வைஜெயந்திமாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.