தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் ஜோ.லியோ.
தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தஞ்சாவூர்
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தந்தை பெரியாரின் 145-, ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், பெரியார் சமுதாய வானொலி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு குழுக்கள், மகளிர் குழு, ஊராட்சி பணியாளர்களால் உருவாக்கப்படும் குறுங்காடு வளர்ப்பு திட்டம் தொடக்க விழா ஊராட்சி மன்ற தலைவர் அ.உதயகுமார் தலைமையில் நடந்தது.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வீ. அன்புராஜ் முன்னிலை வைத்தார். வனம் தன்னார்வ அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் சமூக செயற்பாட்டாளர் வனம் கலைமணி திட்டத்தை விளக்கினார். விழாவில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன துணைவேந்தர் வேலுசாமி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
பதிவாளர் ஸ்ரீவித்யா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி.எஸ்.டி. உதயன், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் அருளானந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சௌமியா ஜனார்த்தனன், தஞ்சாவூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோம. செல்வகுமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயந்தி சதானந்தம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டனர். விழாவில் ஒரே நேரத்தில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்த அவர்களை கிராம் பொதுமக்கள் பாராட்டினர்.