எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் விவேகானந்தா மகளிர் கல்லூரி மற்றும் நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மகளிர் கல்லூரி மற்றும் நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர் பேரணி நடைபெற்றது. பேரணியை விவேகானந்தா கல்லூரி இயக்குனர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். டெங்கு விழிப்புணர்வு பேரணி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி கச்சேரி ரோடு வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது.இந்தப் பேரணியின் போது டெங்கு பற்றி விழிப்புணர்வு அடங்கிய பாதாகைகளை கல்லூரி மாணவிகள் கையில் ஏந்தி முழுக்கமிட்டு சென்றனர்.இதில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, கல்லூரி தாளாளர் ராதாகிருஷ்ணன், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.