ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு”
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொண்டார்.
நிகழ்ச்சியில், கவிஞர் நந்தலாலா அவர்கள் “ஈரம் கசியும் கதைகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாபெரும் தமிழ் கனவின் நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தாண்டு நிகழ்வானது ஜூலை மாதம் தொடங்கியது. உலகில் செழிந்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ் பண்பாடுகளின் பெருமையினையும், வளமையினையும் அம்மொழி எதிர்கொண்ட சவால்களை மாணவ, மாணவியர்களுக்கிடையே கொண்டு சேர்ப்பதே நிகழ்வின் நோக்கமாகும்.
நமது பண்பாட்டின் பெருமையினை இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கிய எதிர்கால சமுதாயத்தின் முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழ் மரபும், நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி, கல்வி புரட்சி, அரசின் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தும் முறைகள் முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவுகளை கொண்ட மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பங்குபெறும் மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி புத்தகம், தமிழ் பெருமிதம் குறித்த கையேடு வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை படித்து மாணவ, மாணவியர்கள் பயன்பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இங்கு வழங்கப்படும் சொற்பொழிவுகளை கேட்டு பயன்பெற வேண்டும். கேட்பதோடு மட்டுமில்லாமல் சொல், செயல், சிந்தனை ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவாளராக, கவிஞர் நந்தலாலா அவர்கள் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு வழங்கிய சொற்பொழிவில் சில ….
உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் மொழி. கீழடி அகழ்வாரய்வில் கிடைக்கப்பெற்ற நெல்மனிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டது. தமிழ் மொழி என்றைக்கும் வளரும் மொழியாகவே இருந்து வருகின்றது. தமிழ் மொழியும் தோற்றம் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக திருக்குறள் வள்ளுவரால் எழுதப்பட்டது.
சிலப்பதிகாரம், மணிமேகலை எழுதிய இளங்கோவடிகள் திருக்குறளை பல இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளார். வீரமாமுனிவர் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டு தமிழின் தொன்மையை அறிந்து திருக்குறளை தனது தாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்.
படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் தமிழ் மொழியை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு முன்னிற்று நடத்துவது மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியாகும். இதன் மூலம் உங்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான உந்து சக்தி கிடைக்கும்.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை, ஆற்றல் உண்டு. அதனை பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குள் உள்ள பலத்தை அறிந்து அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாசம் நிறைந்த குழந்தைகளே தமிழில் ஈரம் நிறைந்த கதைகள் கொட்டி கிடக்கிறது.
அப்துல்கலாம் சொன்னது போல காணவு காணுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் என மேற்காணும் “ஈரம் கசியும் கதைகள்”தலைப்பின் கீழ் சொற்பொழிவாற்றினார்.
அதனைத்தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே சொற்பொழி வாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சிறந்த கேள்வி கேட்ட சிறந்த கேள்வியாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திருவாரூர் அரசுமருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜோசப்ராஜ், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் .சங்கீதா உதவி இயக்குநர் திறன் பயிற்சித்துறை செந்தில்குமாரி மாபெரும் தமிழ்க் கனவு மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜன் வட்டாட்சியர்கள் நக்கீரன், ஜெகதீசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கல்லூரி மாணவ. மாணவியர்கள் கலந்து கொண்டனர்