புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் அவர்களுக்கு துணை நிலை ஆளுநர் அவர்கள் அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைத்து 147 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் முதல்வர் ரங்கசாமி அவர்கள் அமைச்சர் ஜான்குமார் அவர்களுக்கு எந்த இலாகாவும் இதுவரை ஒதுக்கவில்லை. இதுசம்பந்தமாக இரண்டு முறை கவர்னர் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறேன். கடந்த வாரம் கூட துணை நிலை ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். நடவடிக்கை இல்லை.

  இந்தியாவில் இலாகா இல்லாத ஒரு அமைச்சர் புதுவையில் தான் இருக்கிறார். இந்த விஷயத்தில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் தன ஜனநாயக கடமையாற்ற தவறிவிட்டார். தனது சொந்த விருப்பு, வெறுப்பின் காரணமாக அமைச்சருக்கு இலாகா ஒதுக்காத காரணத்தினால் இலாகா இல்லாத அமைச்சருக்கு மக்கள் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா.  ஆகவே கடைசியாக  கடந்த 12/12/2025 அன்று ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக , மாநில தலைவர் என்கிற முறையில், அமைச்சர் ஜான் குமார் அவர்களுக்கு உடனடியாக  இலாகா  ஒதுக்க வேண்டும் என்று மேதகு துணை நிலை ஆளுநர், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர், ஆளுநரின் தனி செயலாளர் மற்றும்  தலைமை செயலாளர் ஆகியோர்களுக்கு உடனடி நடவடிக்கை வேண்டி  கடிதம் அனுப்பியுள்ளேன். அந்த கடிதத்தின் நகலையும் தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.    

நீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்.

அமைச்சர் ஜான்குமாருக்கு உடனடியாக இலாகா ஒதுக்க கோரி துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசித்து அமைச்சர் ஜான்குமார் அவர்களுக்கு உடனடியாக இலாகா ஒதுக்க கோரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்து கொள்கிறேன் என்று R.L . வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *