பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம் செல்போன் பறிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையைச் சேர்ந்தவர் மாதவன் மகன் விஜய்(வயது 19). இவர், தனது நண்பர் சந்தோஷை, அவரது வீட்டில் விடுவதற்காக, இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

இவர்கள் சிறிது தூரம் சென்ற நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், இவர்களது வாகனத்தை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி, இவர்களது இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றனர்.
இதனையடுத்து, வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் பட்டுக்கோட்டை, நகரக் காவல் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில், இவர்களது வாகனம் நிற்பது தெரிய வந்தது.

பின்னர், அவர்களை, பிடிக்க முயன்ற போது, ஒருவர் தப்பி ஓடி விட்டார்,மற்றொருவரை பிடித்து, பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மாதவன், பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், பாபநாசம் போலீஸார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கும்பகோணம், வட்டிபிள்ளையார் கோயில் தெரு செல்வராஜ் மகன் அப்பு(என்கிற) ஜான்கட்சன்(வயது 24) மற்றும் சாக்கோட்டை ரவி மகன் விஜய்(வயது 24) ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது.

பின்னர் பாபநாசம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா, சப் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஜான்கட்சனை கைது செய்து, பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

நீதிபதி அப்துல் கனி ஜான்கட்சனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் ஜான்கட்சனை பாபநாசம் கிளை சிறையில் அடைத்தனர்.மேலும் தப்பியோடிய விஜயை தேடி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *