கோயம்புத்தூர் விழாவின் 16வது பதிப்பின் ஒரு பகுதியாக (2.1.24 முதல் 8.1.24 வரை), கோயம்புத்தூர் நகரின் பெருமைகைளை கொண்டாடும் வகையில், கோயம்புத்தூர் விழா அமைப்பாளர்கள் சார்பில் டபுள் டக்கர் பேருந்தில் கோவை நகரை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க கொண்டு வந்துள்ளனர். இதில் பயணம் செய்ய எந்த கட்டணமும் வசூலிக்க படுவதில்லை.

வ.உ.சி பார்க் கேட்டில் இந்த முறை 2 டபுள் டக்கர் பேருந்துகளை அறிமுகம் செய்தனர்.

டபுள் டக்கர் பேருந்து, கோயம்புத்தூர் விழாவின் 10 வது பதிப்பின் போது முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, மீண்டும் 11வது பதிப்பில் கொண்டுவரப்பட்டது. இந்த பேருந்து பயணம் கோயம்புத்தூர் விழாவின் சின்னமான மாறியது, மேலும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை கோவை மாநகரின் பேருந்துகள் இயக்கப்படும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பிரத்யேக மொபைல் செயலி மூலம் பயணத்தை முன்பதிவு செய்பவர்கள், உலகெங்கிலும் உள்ள மற்ற சிறந்த மெட்ரோ நகரங்களில் உள்ள பயணிகளைப் போலவே, நம் நகரத்தின் அழகிய காட்சியை அனுபவிக்க முடியும்.

மொத்தம் இரண்டு பேருந்துகள் இந்த ஆண்டு அறிமுகப்படுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் 36 இருக்கைகள் உள்ளன, இவை கோயம்புத்தூர் மாநகரில் முதல் இரண்டு நாட்களுக்கு வ.உ.சி மைதானத்தில் தொடங்கி பல்வேறு இடங்களிலிருந்து நகரின் மற்ற இடங்களுக்கு செல்லும், வழிதடம் மற்றும் நேரங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள்பிரத்யேக மொபைல் செயலி மூலம் தெரிந்து கொண்டு முன்பதிவு செய்யலாம்.

முன் பதிவிற்கு : https://bit.ly/doubletakkar

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *