கண்டமங்கலம்
செய்தியாளர். ச.முருகவேலு.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் 36 −வது நினைவு தினம்கோண்டூர்கூட்ரோட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

முன்னதாக கண்டமங்கலம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே. ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் மௌன ஊர்வலம் மேற்கோண்டனர்.

பின்னர் கோண்டூர் கூட்ரோட்டில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி திறந்துவைத்த பஸ் நிழற்குடை அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு கண்டமங்கலம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.ராமதாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துப் பிரிவு கட்சி நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செய்தனர். பின்னர் ஒன்றிய செயலாளர் கே.ராமதாஸ் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து பகுதிகளில் இருந்து கட்சித்தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *