திருவொற்றியூரில்

19-ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இரு வேறு பகுதிகளில் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு

திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் 19-ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு கழக மீனவர் அணி துணைத்தலைவர் கே. பி.சங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

இதில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி அதே பகுதி அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் இருந்து கே.வி. கே.குப்பம் கடற்கரை வரை ஊர்வலமாக சென்றனர்.

இதனை அடுத்து கடலில் பால் ஊற்றி, மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் கவுன்சிலர் சொக்கலிங்கம் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் தாங்கள் பகுதி கடற்கரையில் திருவொற்றியூர் தெற்கு பகுதி சர்க்கிள் தலைவர் எம் பி லோகநாதன் தலைமையில் அகில இந்திய மீனவ காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்டான் பென்னார்டோ, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். திரவியம் முன்னிலையில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு கூறும் வகையில் கடலில் பால் ஊற்றி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்,

இதில் மாமன்ற உறுப்பினர்கள் தீர்த்தி, சுரேஷ் குமார், மீனவர் அணி ராஜேந்திரன், நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *