திருவொற்றியூர்

எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பசுமைத்தாயகம் சார்பில் எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பரிசோதனையை மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்தார்.

மேலும் மருத்துவர் சரத்ராஜ் ஜெயச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

மேலும் மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு
உடல் பரிசோதனை, இருதய பரிசோதனை, நுரையீரல், தோல், கண், அக்கு பஞ்சர், பல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பசுமை தாயகம் அமைப்பு செயலாளர் அருள், பசுமைத் தாயக மாநில அமைப்பு செயலாளர் ராயபுரம் ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. சிவ பிரகாசம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி எஸ் சபாபதி, வடசென்னை மாவட்ட செயலாளர் வண்ணை சத்தியா, மற்றும் அனைத்து மாநில மாவட்ட பகுதி ஒன்றிய வட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது :எண்ணூர் பகுதியில் எண்ணெய் மற்றும் ரசாயன கசிவுகளுக்கான காரணம் குறித்து அரசு இன்று வரை எந்த ஆய்வும் நடத்தவில்லை.

மனித மற்றும் கால்நடை வளங்களுக்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது, இது போன்ற பேரிடர் காலத்தில் எண்ணெய் கசிவுகளை அகற்ற உரிய தொழில்நுட்பம் பின்படுத்தப்படவில்லை.


காலநிலை மாற்றம் காரணமாக இனி ஒவ்வொரு மழையிலும் பெருவெள்ளம் வரலாம், அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சென்னையை தாக்கும் வகையில் மீண்டும் ஒரு பெருவெள்ளம் வரும்
இந்த எண்ணெய் கசிவு விவகாரத்திற்கு யார் காரணம் என ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு (அ) ஆணையமோ அமைக்கவேண்டும் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மும்பையில் முன்பு ஒருமுறை ஏற்பட்ட எண்ணெய் கசிவு விவகாரத்தில் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது ஆனால் எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரத்தில் கசிவு ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அரசின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது,

மேலும் 8.45 கோடி ரூபாய் நிவாரணம் என்பது எந்த வகைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடாக இருக்காது எனவும் முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய மாநில அரசுகளை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைக்காமல் மீட்பு பணிகளில் இணைந்து செயல்பட வேண்டும்
மாநில அரசின் செயல்பாடு மந்தமாக இருந்து வருகிறது

மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். பருவ மழை கால கட்டத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பை தடுக்க போதிய பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு தவறிவிட்டது என்றும் இதுவரை பெரிய அளவில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.


வானிலை ஆய்வு மையத்தையோ மத்திய அரசையோ குறை சொல்வதை விட்டுவிட்டு மீட்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தலாம் மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுக்கு உள்ள இகோ பிரச்சனைகளை விட்டு விட்டு மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும். மேலும் வானிலை முன்னறிவிப்பிற்கு உலகதரா கருவி இருப்பதாக தெரிவிக்கும் வானிலை ஆய்வு மையம் மழை முன்னெச்சரிக்கையை குறித்த நேரத்தில் வழங்கவில்லை தான் ஆனால் வானிலை ஆய்வு மையம் சரியான முன்னெச்சரிக்கை கொடுத்து விட்டால் அரசு நடவடிக்கை எடுத்து விடுவார்களா ? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *