தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் காத்தல் சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009 தொடர்பான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி குத்து விளக்கேற்றி பயிற்சியினை துவக்கி வைத்தார்கள்.

முன்னதாக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் காத்தல் சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009ன் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.

இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களை மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா வரவேற்று வரவேற்புரை நல்கினார்.

மேலும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் காத்தல் சட்டம் தொடர்பாக வழக்கறிஞர். முத்துலக்ஷ்மி, முதியோர் உதவி எண் தொடர்பக அமுதா மற்றும் முதியோர் இல்ல பதிவுகள் தொடர்பாக மருத்துவர்.சுகன்யா கருத்துரை வழங்கினார்கள்.

மேலும் இப்பயிற்சியில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் காத்தல் கைபேசி செயலி தொடர்பகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது பயிற்சியின் இறுதியாக மகளிர் அதிகார மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் நன்றியுரை வழங்கினார்.

இப்பயிற்சியில் சமூக நல துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், சுகாதார துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சகி-ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மகளிர் அதிகார மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *