ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வயலாய்வு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வயலாய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் அதம்பார்-1 பகுதியில் இயந்திர நடவு முறையில் பசுந்தாள் உரம் மடக்கி உழப்பட்டு, நடவு செய்யப்பட்டு களைக்கொள்ளி பயன்படுத்தப்பட்ட வயலினையும், வரப்பு உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள.

தனையும், நெம்மேலி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு களைக்கொல்லி பயன்படுத்தப்பட்ட வயலினையும் வெள்ளை அதம்பார் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் களைக்கொல்லி பயன்படுத்தப்பட்ட வயலினையும் பிரதாபராமபுரம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகளையும் பருத்தியூர் பகுதியில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள தனையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வயலாய்வு மேற்கொண்டார்

அதனைத்தொடர்ந்து மஞ்சக்குடியில் அமைந்துள்ள சுவாமி தயானந்தா இயற்கை விவசாய பண்ணையில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்படுவதனை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் .பூண்டி.கே.கலைவாணன் அவர்களும் பார்வையிட்டார்கள்.
நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் ஏழுமலை வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) லட்சுமிகாந்தன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலெட்சுமி வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் குடவாசல் வேளாண்மை அலுவலர் ஸ்ரீவெங்கடேஷ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *