கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக சுமார் 800 குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது

நமது பாரம்பரியமிக்க கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் துணிமணிகள் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக நிர்வாகிகள் மகாசபை உறுப்பினர்கள் நேரடியாக அவர்கள் இல்லம் தேடி பொருட்களை முறையாக விநியோகம் செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

26.12.23 காலை நமது ஜமாத்தின் நிர்வாகிகள் தலைமையில் 16-க்கும் மேற்பட்ட நபர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், தெற்காத்தூர், வடகத்தூர், காயல்பட்டணம்,ஏரல்,செம்பட்டி,அம்பேத்கர் நகர்,சுனாமி நகர்,மதினா நகர்,முக்காணி,பழைய காயல்,உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜாதி மதம் பாராமல் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நேரடியாக அவர்கள் இல்லங்கள் தேடி சுமார் 800 குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள், புதிய ஆடைகள் என அனைத்து விதமான பொருட்களையும் முறையாக அல்லாஹ்வின் கிருபையால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஒரு வாரம் காலமாக நமது பள்ளிவாசலில் வசூல் செய்யப்பட்டு, பொருட்களை சேகரித்து வந்த நிலையில் அனைத்து பொருட்களும் முறையாக சென்றடைந்தது.

இந்த நல்ல காரியத்தில் பங்கெடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பொருளாதார உதவி செய்த நபர்களுக்கும், பொருட்கள் தந்த நபர்களுக்கும்,மற்றும் இந்த பணிகளை இரவு பகல் பாராமல் பேக்கிங் செய்து இரண்டு நாட்கள் தங்களுடைய உடல் உழைப்பையும் செலுத்திய நல் உள்ளங்களுக்கும் மற்றும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் ஒருங்கிணைத்த நிர்வாகிகளுக்கும் பள்ளியின் ஊழியர்களுக்கும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த மகாசபையாளர்களுக்கும் இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *